Photo Gallery

High Commissioner of India monitors projects in the Eastern province

High Commissioner of India monitors projects in the Eastern province

In a special ceremony held on September 14, 2018, at Batticaloa District, High Commissioner of India H.E. Mr. Taranjit Singh Sandhu dedicated houses built under the Indian Housing Project in Batticaloa for possession by beneficiaries.

Government of India has committed a total of 4000 houses in the Eastern Province. This is in addition to 42000 houses built under grants by Government of India in the North and 14000 currently constructing also under grants in the Upcountry.

Earlier during his visit to Trincomalee, High commissioner met the Governor of Eastern Province, addressed the gathering of Eastern Province officers and took blessings at ThiruKoneswaran Temple.

The High Commissioner was the Chief Guest at the convocation ceremony of Eastern University, Batticaloa and addressed the gathering. He paid respects to the Gandhi statue at Batticaloa. He met the representatives of TNA from Eastern Province and had a brief discussion with a delegation from various Mosque Federations.

High Commissioner also visited the Trade Facilitation Center by first ever cooperative society of war affected women in the eastern province in Kallady. Self Employed Women’s Association (SEWA) –an Indian based community based organization, with the grant assistance of LKR 197 million from the Government of India has executed the project. The objective is to empower war affected women by building their capacities in vocations, leadership, entrepreneurial and management skills by setting up Trade Facilitation Center and Community Learning Centre in Batticaoloa and Ampara, which helps them to provide skills and value chain support to provide livelihood opportunities. 

Under the project, SEWA has trained 40 war affected/destitute women trainees from Batticaloa District. These women were trained in various vocational subjects such as Textiles and Garments; Surface Ornamentation; Agro food processing; Computers; Enterprise Development; Solar lantern and Roof rain water harvesting. 

Other projects undertaken by India in the social sector include construction of surgical unit in teaching Hospital Batticaloa, Upgradation of Swami Vipulananda Aesthetic School in Batticaloa, construction of 3400 toilets in Batticaloa District, and Model village in all three districts.

India’s overall commitment of assistance to Sri Lanka for people-oriented development partnership projects stands at a total of around US$ 3 billion, out of which US$ 550 million is pure grant assistance.

Colombo
September 15, 2018

ஊடக அறிக்கை

இந்திய உயர் ஸ்தானிகர் கிழக்கு மாகாணத்தில் செயல்திட்டங்களை பார்வையிடுகிறார்

கிழக்கு மாகாணத்தில், செப்டெம்பர் 14, 2018 அன்று நடைபெற்ற ஒரு விசேட வைபவத்தில், இந்திய உயர் ஸ்தானிகர் மேதகு தரண்ஜித் சிங் சந்து அவர்கள் மட்டக்களப்பில் இந்திய வீட்டு வசதி செயல்திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை பயனாளிகளிடம் கையளித்தார். 

கிழக்கு மாகாணத்தில் மொத்தம் 4000 வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு இந்திய அரசாங்கம் உறுதியளித்தது. இது, வடக்கில் இந்திய அரசாங்கத்தால் நன்கொடையளிக்கப்பட்ட 42000 வீடுகள் மற்றும் தற்போது மலைநாட்டில் நன்கொடைகளின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வரும் 14000 வீடுகள், என்பவற்றுக்கு மேலதிகமானதாகும்.

அவரது விஜயத்தில், முன்னதாக திருகோணமலையில் உயர் ஸ்தானிகர் கிழக்கு மாகாண ஆளுனரைச் சந்தித்து, கிழக்கு மாகாண அரச அதிகாரிகளின் ஒரு கூட்டத்தில் உரை ஆற்றியிருந்ததுடன் திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கும் சென்று ஆசிகளைப் பெற்றுக் கொண்டார். 

மட்டக்களப்பு, கிழக்குப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் உயர் ஸ்தானிகர் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு கூட்டத்தில் உரையாற்றினார். மட்டக்களப்பில் காந்தி சிலைக்கும் அவர் மரியாதை செலுத்தினார். கிழக்கு மாகாணத்திலிருந்தான தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை அவர் சந்தித்ததுடன் பல்வேறு பள்ளிவாசல் சம்மேளனங் களிலிருந்தான பிரதிகளின் ஒரு குழுவுடனும் சுருக்கமான கலந்துரையாடலை மேற் கொண்டிருந்தார்.

                கிழக்கு மாகாணத்தின் கல்லடி எனுமிடத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் முதலாவது கூட்டுறவு சமாஜத்தினால் நடத்தப்படுகின்ற வர்த்தக வசதியளித்தல் நிலையத்திற்கும் உயர் ஸ்தானிகர் விஜயம் செய்தார். இந்தியாவைத் தளமாகக் கொண்ட சமூக அடிப்படை ஸ்தாபனமொன்றான ‘பெண்கள் சுய வேலைவாய்ப்புச் சங்கம்’ (SEWA), இந்திய அரசாங்கத்திட மிருந்து 197 மில்லியன் இலங்கை ரூபாய் நன்கொடையுடன் இந்த செயல்திட்டத்தை மேற்கொண்டது. இத்திட்டத்தின் குறிக்கோள், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய இடங்களில் வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவதற்கான திறன்கள் மற்றும் பெறுமதிச் சங்கிலி ஒத்தாசை என்பவற்றை அளிப்பதற்கு உதவும், வர்த்தக வசதியளித்தல் நிலையம் மற்றும் சமூகக் கற்கை நிலையம் என்பவற்றை ஸ்தாபிப்பதன் மூலம் செய்யும் தொழில்கள்; தலைமைத்துவம்; தொழில் முயற்சி மற்றும் முகாமைத்துவத் திறன்கள் என்பவற்றில் செயற்றினைக் கட்டியெழுப்பி அதனூடாக போரினால் பாதிக்கப்பட்ட பெண்களை வலுப்படுத்துவதாகும். 

இந்த செயல்திட்டத்தின் கீழ், SEWA மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 40 போரினால் பாதிக்கப்பட்ட/நிர்க்கதியான பெண்களைப் பயிற்றுவித்துள்ளது. இந்தப் பெண்கள் துணி வகைகள் மற்றும் தைத்த ஆடைகள்; துணி அலங்காரம்; விவசாய உணவுச் செயன்முறை; கணனிகள்; தொழில் முயற்சி அபிவிருத்தி; சூரிய விளக்கு மற்றும் மழை நீர் சேகரிப்பு போன்ற பல்வேறு செய்தொழில் விடயங்களில் பயிற்றுவிக்கப்பட்டனர்.

சமூகம் சாரந்த துறையில், இந்தியாவினால் மேற்கொள்ளப்பட்ட ஏனைய செயல்திட்டங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைப் பிரிவை நிர்மாணித்தல், மட்டக்களப்பில் விபுலானந்தா அழகியல் கல்விப் பாடசாலைய மேம்படுத்துதல், மட்டக்களப்பு மாவட்டத்தில் 3400 கழிப்பறைகளை நிர்மாணித்தல் மற்றும் கிழக்கின் அனைத்து மூன்று மாவட்டங்களிலும் மாதிரிக் கிராமத்தை நிர்மாணித்தல் என்பவற்றை உள்ளடக்குகின்றன.

இலங்கையில் மக்கள் சார்ந்த அபிவிருத்திச் செயல்திட்டங்களிற்கு இந்தியாவின் மொத்த பற்றுறுதி  US$ 3 பில்லியன்களை அண்மித்தவையாக உள்ளன என்பதுடன் அவற்றுள் US$ 550 மில்லியன்களுக்கும் அதிகமான தொகை தனியே நன்கொடை உதவிகளாகும்.  

கொழும்பு
செப்டெம்பர் 15, 2018

පුවත්පත් නිවේදනය

ඉන්දියානු මහ කොමසාරිස්තුමා නැගෙනහිර පළාතේ ව්‍යාපෘතින් නිරීක්ෂණය කරයි

2018 සැප්තැම්බර් 14 වන දින මඩකළපුව දිස්ත්‍රික්කයේ පවත්වන ලද විශේෂ උත්සවයකදී, ඉන්දියානු නිවාස ව්‍යාපෘතිය යටතේ  මඩකළපුවේ ඉදිකරන ලද නිවාස ඉන්දියානු මහ කොමසාරිස් තරංජිත් සිං සන්ධු මැතිතුමා අතින් ජනතා අයිතියට පත් කෙරිණ.

ඉන්දීය ආධාර යටතේ උතුරු පළාතේ ඉදි කරන ලද නිවාස 42000 සහ වතුකරයේ දැනට ඉදිවෙමින් පවතින නිවාස 14000 ට අමතරව ඉන්දියානු රජය නැගෙනහිර පළාතේ නිවාස 4,000 ක් ඉදි කරනු ලබයි.

ත්‍රිකුණාමලය සංචාරය අතරතුරදී මහ කොමසාරිස්තුමා නැගෙනහිර පළාතේ ආණ්ඩුකාරවරයා හමු වූ අතර  නැගෙනහිර පළාත් සභාවේ නිලධාරින්ද ඇමතීය. ඉන් අනතුරුව මහ කොමසාරිස්තුමා තිරුකෝනේෂ්වරන් කෝවිලට ගොස් ආශිර්වාද ලබා ගත්තේය.

නැගෙනහිර විශ්ව විද්‍යාලයීය උපාධි ප්‍රදානෝත්සවයේ ප්‍රධාන ආරාධිත අමුත්තා ලෙස සහභාගී වූ මහ කොමසාරිස්තුමා  උත්සව සභාවද ඇමතීය. එතුමා මඩකළපුවේ පිහිටි ගාන්ධි පිළිරුවට සිය ගරුබුහුමන් පුද කළේය. එතුමා නැගෙනහිර පළාතේ දෙමළ ජාතික සන්ධාන නියෝජිතයන් හමුවූ අතර මුස්ලිම් පල්ලිවල නියෝජිත පිරිසක් සමඟ කෙටි සාකච්ඡාවකද නිරත විය.

මහ කොමසාරිස්තුමා  නැගෙනහිර පළාතේ කල්ලඩි ප්‍රදේශයේ පිහිටි, යුද්ධයෙන් පීඩාවට පත් කාන්තාවන්ගේ ප්‍රථම සමූපකාර සමාජයේ වෙළඳ පහසුකම් මධ්‍යස්‌ථානයද නිරීක්ෂණය කළේය. ඉන්දියානු ප්‍රජා මුලික සංවිධානයක් වන ස්වයං රැකියා නියුක්තික කාන්තා සංගමය (SEWA) ඉන්දීය රජයේ රුපියල් මිලියන 197 ක ප්‍රදානයක් යටතේ මෙම ව්‍යාපෘතිය ක්‍රියාවට නංවා ඇත. මෙහි අරමුණ වන්නේ මඩකළපුව හා අම්පාර ප්‍රදේශයන්හි වෙළඳ පහසුකම් මධ්‍යස්‌ථානයක් සහ ප්‍රජා ඉගෙනුම් මධ්‍යස්‌ථානයක් පිහිටුවා යුද්ධයෙන් පීඩාවට පත් වූ කාන්තාවන්ට ඔවුන්ගේ වෘත්තීය හැකියාවන්, නායකත්වය හා ව්‍යවසායකත්ව සහ කළමනාකරණ කුසලතා වර්ධනය කොට ඔවුන්ට ජීවනෝපාය මාර්ග සම්පාදනය කර ගැනීම සඳහා නිපුණත්වය ලබා දීමයි.

මෙම ව්‍යාපෘතිය යටතේ SEWA විසින් මඩකළපුව දිස්ත්‍රික්කයේ යුද්ධයෙන් පීඩාවට පත්වූ / අවතැන් වූ කාන්තාවන් 40 දෙනෙකු පුහුණු කර ඇත. මෙම කාන්තාවන් රෙදිපිළි හා ඇඟළුම්, මතුපිට සැරසිලි, කෘෂි ආහාර සැකසුම්, පරිගණක, ව්‍යවසායක සංවර්ධනය, සූර්ය පහන් සහ වැසි ජලය රැස් කිරීම වැනි විවිධ වෘත්තීය විෂයයන් සඳහා පුහුණු කරනු ලැබීය.

මෙයට අමතරව මඩකළපුව ශික්ෂණ රෝහලේ ශල්‍ය වෛද්‍ය ඒකකයක් ඉදිකිරීම, මඩකළපුවේ ස්වාමි විපුලානන්ද සෞන්දර්ය පාසල වැඩිදියුණු කිරීම, මඩකළපුව දිස්ත්‍රික්කයේ වැසිකිළි 3400 ක් ඉදි කිරීම සහ නැගෙනහිර පළාතේ දිස්ත්‍රික්ක තුනෙහිම ආදර්ශ ගම්මාන ඉදිකිරීම ආදී සමාජ සත්කාරක ව්‍යාපෘතින් ඉන්දියාව ක්‍රියාවට නංවා ඇත.

ශ්‍රී ලංකාව තුළ ජනතා කේන්ද්‍රීය සංවර්ධන සහයෝගීතා ව්‍යාපෘතීන් සඳහා ඉන්දියාව ඇමරිකානු ඩොලර් බිලියන 3 ක් පමණ ලබා දී ඇති අතර ඉන් ඇමරිකානු ඩොලර් මිලියන 550 ක්ම නැවත නොගෙවිය යුතු ප්‍රදාන වේ.

කොළඹ
2018 සැප්තැම්බර් 15

 
Photo Gallery